தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி அறிக்கையை 12 வாரங்களில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011-ம் ஆண்டு புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2011-ம் ஆண்டு, நடிகை விஜயலட்சுமி தன் மீது தொடரப்பட்ட பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெறுவதாக, 2012-ல் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், போலீசார் வழக்கை முடித்து வைத்தனர். ஆனால், தற்போது, அரசியல் காரணங்களுக்காக, போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே, தான் கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என விஜயலட்சுமி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக நடந்தது. சீமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், சிலரின் தூண்டுதலால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன் போலீஸ் தரப்பில் ஆஜரான ”2008-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வெளிப் பிராகாரத்தில் நடிகை விஜயலட்சுமியும், சீமானும் மாலை மாற்றிக் கொண்டனர். ஆனால் தாலி கட்டவில்லை. சீமானை திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியதால் விஜயலட்சுமி சீமானுடன் நெருங்கி பழகினார்.
பின்னர், சிலரின் அழுத்தம் காரணமாக தனது பாலியல் புகாரை வாபஸ் பெற்றார். அவள் தன்னிச்சையாக அதை திரும்பப் பெறவில்லை. எனவே சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கூடாது” என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரன் அப்படியென்றால் நடிகை விஜயலட்சுமி சீமானின் முதல் மனைவியா?’’ என கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, ”இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கில் 12 வாரத்தில் போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,” என சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.