கோவை: தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே உரித்தான மசோதாவுக்கு, சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது. அவர் நமது உரிமைகளை மீட்டெடுத்தார்.
முதல்வர் பெரும் முயற்சி எடுத்து நீதிமன்றம் மூலம் அதை நிலைநாட்டியுள்ளார். இதை வருங்கால சந்ததியினரும் அறியும் வகையில், நீதிமன்றம் மூலம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை முதல்வர் பெற்றுள்ளார். பற்றாக்குறையால் மின்வெட்டு ஏற்பட்டதாக இதுவரை புகார் இல்லை.

ஏதோ தவறு காரணமாக மின்வெட்டு ஏற்பட்டிருக்கலாம். தற்போது தேவைக்கு அதிகமாக மின்சாரம் கிடைத்து வருகிறது. கோடை காலத்தில் தடையின்றி சீராக மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறோம், என்றார்.