மதுரை: ஓசியில் தனது பைக்கை சர்வீஸ் செய்து தரவில்லை என கோபமடைந்த எஸ்.ஐ. மெக்கானிக் கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் புல்லட்டை ஓசியில் பழுது பார்த்து தரவில்லை என்ற கோபத்தில் காவல்துறை சார்பு ஆய்வாளர், மெக்கானிக் கடை ஊழியரை தாக்கி, கஞ்சா வழக்கு போடுவேன மிரட்டியதாக அக்கடை உரிமையாளர் சிசிடிவி ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.
பாலமேடு காவல் நிலையத்தில் காப்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் அண்ணாதுரை 3 வருடங்களுக்கு முன்பு வாடிபட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தபோது தனது ஓர்க் ஷாப்பில் பைக்கை பழுது பார்த்து தந்ததில் 8 ஆயிரத்து 500 ரூபாய் பாக்கி வைத்திருந்தார் என உரிமையார் புகாரில் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தனது பைக்கை சர்வீஸ் செய்து தரும்படி அண்ணாதுரை கொடுத்ததாகவும், பணமிருந்தால் நான் செய்யமுடியும் என அதனை அப்படியே வைத்ததால் தன்னை தாக்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.