விழுப்புரம்: ஆரோவில் பகுதியில் மாணவி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரது சகோதரி புகார் தெரிவித்துள்ளார்.
ஆரோவில் பகுதியில் கடலில் மூழ்கி 24 வயதான உத்தரப்பிரதேச மாணவி சௌமியா பலியானதில், பெண் உட்பட 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாக அம்மாணவியின் சகோதரி விழுப்புரம் கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
வாரணாசியைச் சேர்ந்த சௌமியாவும் லால்குடியைச் சேர்ந்த சித்தார்த்தும் அரியானாவில் படித்த போது நட்பாக பழகி வந்துள்ளனர். காதல் தோல்வியால் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் சித்தார்த் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது தாயார் ஜெயந்தி, சௌமியாவை ஆரோவில்லுக்கு வரவழைத்து சந்தித்ததாக கூறப்படுகிறது.
ஜெயந்தி ஊருக்கு புறப்பட்ட நிலையில் தான் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸ் ஊழியர் சுரேஷ் உடன் சௌமியா பிள்ளைச்சாவடி கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அதே கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்த ஒரிசாவைச் சேர்ந்த மணீஸ், டாக்டர் கணேஷ் ஆகியோருடன் சேர்ந்து கடலில் குளித்த போது சௌமியா கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.