கோவை : கோவை மாவட்டத்தில் உற்பத்தி துறையின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் திறமையான பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனால் பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலதிபர்கள் கூறுகின்றனர். இத்தகைய சூழலில் கோவையில் தனியார் நிறுவனம் மூலம் திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டு தொழில்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
‘டைட்டன்’ முதன்மை நிலைத்தன்மை அதிகாரி ஸ்ரீதர், ‘இந்து தமிழ் வெக்டிக்’ நிருபரிடம் கூறியதாவது: எங்கள் நிறுவனம் சார்பில், சென்னை கிண்டியில் தொழிலாளர் திறன் மேம்பாட்டு மையம் செயல்படுத்தப்படுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிக இன்ஜினியரிங் தயாரிப்பு நிறுவனங்களைக் கொண்ட கோவையில் உள்ள திறன் மேம்பாட்டு மையம் ஜூலை 24 முதல் செயல்படும்.
பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் கலந்துரையாடி அவர்களுக்குத் தேவையான துறைகளில் திறமையான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சமுதாயத்தில் நலிவடைந்த வேலையில்லாத இளைஞர்களுக்கு அவர்களின் திறமைக்கேற்ப திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் ஆண்டில் 600 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம், என்றார். தென்னிந்திய ஆலைகள் சங்கத்தின் (சைமா) முன்னாள் தலைவர் ரவிசம் கூறுகையில், ”உற்பத்தி தொழிற்சாலைகளில் அடிப்படை பணிகளுக்கான பணியாளர்கள் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இத்தகைய சூழலில், தனியார் சார்பில் திறன் மேம்பாட்டு மையம் துவங்குவது வரவேற்கத்தக்கது. பொறியியல் உற்பத்தி நிறுவனங்களுக்கு உதவும் நிறுவனம்.