சூரிய மின் உற்பத்திக்கு சூரியனின் வெப்பத்தை விட ஒளி முக்கியமானது. அந்த வகையில் தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேல் சூரிய ஒளி மின்சாரம் கிடைக்கும் சூழல் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் காலை 5.30 மணி முதல் 7 மணி வரையும், மழை நாட்கள் தவிர மற்ற மாதங்களில் காலை 6.30 மணி முதல் மாலை 6 மணி வரையும் சூரிய ஒளி கிடைக்கும்.

இதனால், பலர் தங்கள் வீடுகளில் குறைந்த திறன் கொண்ட கூரை மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து வருகின்றனர். கடந்த மாத நிலவரப்படி, தமிழகத்தில் மொத்த சூரிய ஒளி மின் உற்பத்தி 10,153 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதில், 932 மெகாவாட் திறன் கொண்ட கூரை சூரிய மின் நிலையங்கள் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், விவசாய திட்டங்களின் கீழ் 700 மெகாவாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சூரிய ஒளி மின் நிலையங்களில் மழைக்காலம் தவிர மற்ற நாட்களில் சராசரியாக 5,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.