சென்னை: மனிதனுக்கு முக அழகு எவ்வளவு முக்கியமோ அதேபோல ஒரு வீட்டிற்கு முகப்பு அழகும் அதைவிட தலைவாசல் அழகும் முக்கியம்.
சிலர் தங்கள் வீடுகளில் தினசரி தவறாமல் பூஜைகள் செய்வதுடன் வீட்டுத் தலைவாசலுக்கும் பூஜை செய்கிறார்கள். ஏன் இப்படிச் செய்கிறார்கள். தலைவாசல் என்பது தங்கள் வீட்டு பூஜை அறைக்கு சமமான இடம்.
வீடு என்றாலே முதலில் இடம் பிடிப்பது தலைவாசல்தான். சிலர் தலைவாசலுக்கு சரமாலை இடுவதும் தவறாமல் குங்கும் திலகமிடுவதும் இன்னும் சிலர் கதவுகளில் சாமி படங்களைச் செதுக்கி அதற்கும் பூஜை செய்வதும் உண்டு.
தலைவாசல் நிலைக்காலின் உள் அளவுகள் மட்டுமே. நீங்கள் எவ்வளவு பெரிய மரத்தில் வேண்டுமானாலும் நிலையை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் உள் அளவுகளே கணக்கில் கொள்ளப்படும்.
தலைவாசல்… நவக்கிரக தலைவாசல், குபேர தலைவாசல், சூரியச் சந்திர தலைவாசல் என்று நம் முன்ோர்கள் சரியாக கணித்துள்ளனர். இந்த நவக்கிரக வாசலுக்கு வரும் கதவில் பாதிக்கு மேல் பாகத்தில் விநாயகர் படமும், கதவின் பாதிக்குக் கீழ்பாகத்தில் காமதேனுவின் படமும் வரும்படி மரத்தில் செதுக்கி கதவாகப் பயன்படுத்த வேண்டும்.
37×71 என்ற அளவில் உள்ள நவக்கிரக வாசல், உங்கள் வீட்டில் நீங்கள் வைத்து வீடு கட்டியிருந்தால் இப்படிப்பட்ட வீட்டில் பூஜை அறைக்கு நிகராக இந்த தலைவாசல் முக்கியத்துவம் பெறுகிறது.
குபேரத் தலைவாசல் நிலையின் உள் அளவுகளாக 33க்கு 66 என்ற அளவு வரும். குபேரத்தலைவாசல் வைத்து வீட்டைக் கட்டும் போது தலைவாசலின் கதவில் பாதிக்கு மேல் பாகத்தில் மகாலட்சுமி படமும், அதே கதவின் பாதிக்குக் கீழ்பாகத்தில் அன்னலட்சுமி படமும் வரும்படி செய்து கொள்ள வேண்டும்.
சும்மா திறந்து மூடும் கதவுக்கு இத்தனை விதிகளா? எனக் கேட்கத் தோன்றும். ஆம் இதுதான் நமது பாரம்பரியம்.
சூரிய சந்திரத்தலைவாசல் இந்த சூரிய சந்திர தலைவாசல் உள் அளவுகளாக முறையே 33ஙீ69 இன்ச் என்ற அளவில் இருக்கும்.இவ்வாறு உள்ள அளவு சூரியச் சந்திர தலைவாசல் என கொள்ளப்படுகிறது. இதில் 33 என்பது நிலையின் அகலமாகவும், 69 என்பது நிலையின் உயரம் என்றும் கணக்கில் கொள்ளவும்.
நிலைகள் செய்ய உகந்த மரங்களாக தேக்குமரமும் கிராமங்களில் நிறைய பேர் வேம்பு மரத்தில் நிலைச் சட்டங்கள் செய்வார்கள். பூவரசு மரத்திலும் வேங்கை மரம், கோங்குமரம், படாக் மரம் என இவற்றில் தலைவாசல் செய்துண்டு. இந்த மரங்களில் இரண்டு பக்கவாட்டுச் சட்டங்கள் மேலும் மேல் சட்டம் செய்து கொண்டு கீழே உள்ள படிச்சட்டத்திற்கு பால் மரங்கள் பயன்படுத்துவதுண்டு.