சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் “இன்று டிசம்பர் 21, சனி, டிசம்பர் 22, ஞாயிறு, டிசம்பர் 23 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து கிறிஸ்துமஸ் மற்றும் வார விடுமுறை நாட்களில் தமிழகம் முழுவதும் அதிக அளவில் பயணிகள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு இன்று 325 பேருந்துகளும், நாளை 280 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூருக்கு இன்று மற்றும் நாளை ஆகிய தேதிகளில் மேற்குறிப்பிட்ட இடங்களில் இருந்து மொத்தம் 81 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாதவரத்தில் இருந்து மொத்தம் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு செல்ல பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க www.tnstc.in மற்றும் Mobile App மூலம் தங்கள் பயணத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.