சென்னை: பாலியல் குற்றங்களை விசாரிக்க 7 சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: பாலியல் வழக்குகளில் சிறையில் உள்ளோர் முன் விடுதலை பெறாமல் இருப்பதை தடுப்பதற்கு சிறை விதிகளில் திருத்தம் செய்யப்படும்.
மாவட்டங்கள் தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படும். பாலியல் குற்றங்களை விசாரிக்க மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் 7 சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று கூறினார்.