சென்னை: கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 75 பயணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களில் 75 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி மூலம் சிறப்பு குலுக்கல் மூலம் 75 பேர் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு 25 பேருக்கும், இரண்டாம் பரிசு 25 பேருக்கும், மூன்றாம் பரிசு 25 பேருக்கும் என மொத்தம் 75 பயணிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.