கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுருளி அருவி தண்ணீரின்றி வறண்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி தமிழ்நாட்டின் புனித தலமாகவும், சுற்றுலா தலமாகவும் கருதப்படுகிறது. ஈத்தாக்காடு, அரிச்சிப்பாறை மற்றும் மேகமலை, தூவாணம் அணைகளில் இருந்து தண்ணீர் பெறுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. தற்போது சுருளி அருவி நீர்பிடிப்பு பகுதிகளான இடக்காடு, அரிச்சிப்பாறை ஆகிய பகுதிகள் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யாததால் வறண்டு கிடக்கிறது. இதனால் சுருளி அருவி தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.
இதனிடையே, அடுத்த மாதம் 14-ம் தேதி, தமிழ் புத்தாண்டையொட்டி, மேகமலை அருகே தூவாணம் அணை பகுதியில் இருந்து சுருளி அருவி வரை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளித்து மகிழுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சுருளி அருவியில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடப்பதால் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.