கொழும்பு: மீனவர் பிரச்னைக்கு மனிதாபிமானத்துடன் தீர்வு காண வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியதை அடுத்து, சிறப்பு நடவடிக்கையாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை அரசு விடுவித்துள்ளது. சிறப்பு நடவடிக்கையாக 11 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். முன்னதாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, கொழும்பில் அந்நாட்டு அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து பேசினார்.
இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் மீனவர்கள் பிரச்னை முக்கிய பங்கு வகித்தது. பேச்சுவார்த்தைக்கு பின், திசாநாயக்காவுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, “மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனை குறித்து ஆலோசித்தோம். மீனவர்கள் பிரச்னையில் மனிதாபிமான அணுகுமுறையை கடைபிடிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களின் படகுகளும் ஒப்படைக்கப்பட்டன” என்றார்.

இந்தியா-இலங்கை இடையே நீண்ட நாட்களாக மீனவர் பிரச்சனை இருந்து வருகிறது. தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள பாக் ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் வலுக்கட்டாயமாக தாக்குதல் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, சனிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “பிரதமரின் உரையில் கூறியது போல், மீனவர் பிரச்சினையில் மனிதாபிமான மற்றும் ஆக்கபூர்வமான அணுகுமுறை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஏனெனில், இது இறுதியில் இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சினை. நாளின் முடிவில், இரு நாட்டு மீனவர்களுக்கும் இது அன்றாடப் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், அண்மைக்காலமாக எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளை மீளாய்வு செய்ய முடியும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.