ஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பணப் பரிமாற்றச் சேவைகளுக்கான கட்டணத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியைத் தவிர மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ. 17-ல் இருந்து ரூ. 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்மில் ஒவ்வொரு மாதமும் 5 இலவச பரிவர்த்தனைகளை செய்யலாம். 5 முறைக்குப் பிறகும் பணம் எடுத்தால் அதற்கான கட்டணம் ரூ.21-ல் இருந்து ரூ. 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் மே 1 முதல் அமலுக்கு வரும். இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் இணையதள பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு, ‘அனைவரும் வங்கி கணக்கு துவக்க வேண்டும்’ என, கூறியுள்ளது. அப்போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்து டிஜிட்டல் இந்தியா என்றார்கள். அடுத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலித்தனர். இருப்பு குறைவாக இருப்பதாக கூறி அபராதம் விதித்தனர். தற்போது ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அனுமதிக்கப்பட்ட மாதாந்திர வரம்பை மீறும் ஒவ்வொரு ஏடிஎம் பணத்திற்கும் ரூ. 23. இதனால் என்ன நடக்கும்? தேவைக்கு அதிகமாக மக்கள் ஒரே நேரத்தில் பணத்தை எடுக்க வேண்டும்.
இது ஏழைகளுக்கு வங்கிச் சேவைகளை வழங்கும் நோக்கத்தையே தோற்கடிக்கும். ஏற்கனவே நிதியில்லாமல் தவிக்கும் நூறு நாள் வேலை திட்டப் பயனாளிகளும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தால் பயன்பெறும் ஏழைகளும்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இது டிஜிட்டல்மயமாக்கல் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகளின் ஏடிஎம் கார்டை ஸ்வைப் செய்து பணக்காரர்கள் பணக்காரர்களாகி வருகின்றனர். இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.