சென்னை: விகடன் இணையதளத்தில் பிரதமர் மோடியின் காட்டூன் இடம் பெற்றதால் இணையதளம் முடக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வரின் சமூக வலைதளப் பதிவு:- நூறாண்டு காலமாக ஊடகங்களில் இயங்கி வரும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதை கண்டிக்கிறேன். கருத்துக்களுக்காக ஊடகங்களை முடக்குவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல! பாஜகவின் பாசிசத் தன்மைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. மூடப்பட்ட இணையதளத்திற்கு உடனடியாக அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.