சென்னை : இன்று காலை பொதுத்தேர்வுகள் +1 மற்றும் + 2 மாணவர்களுக்கு தொடங்குகிறது. இதை எடுத்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இன்று காலை +1, +2 பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. இதையொட்டி மாணவர்களுக்கு வாழ்த்து சொல்லியுள்ள முதல்வர் ஸ்டாலின், இப்பொதுத்தேர்வுகள் உங்களது உயர்க்கல்விக்கும்.வாழ்க்கைக்கும் மிக முக்கியமான அடித்தளமாகும்..
நீங்கள் தேர்வினை மன அமைதியுடன், தன்னம்பிக்கையுடன் எழுத வேண்டும் என்று ஆலோசனை அளித்துள்ளார்.
மேலும், நீங்கள் இதுவரை செய்த முயற்சிகள், உங்கள் தேர்வில் நல்ல முடிவுகளைத் தரும் என்றும் முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.