மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் நேற்று காய்ச்சல் மற்றும் சளி காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து கேட்டபோது, மருத்துவமனை டீன் சாந்தராமன், “பெ. சண்முகம் நலமாக உள்ளார்.
மருத்துவர்கள் தேவையான சிகிச்சை அளித்து வருகின்றனர். 2 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு அவர் வீடு திரும்புவார்” என்றார்.