கரூர்: இனியாவது பாதுகாப்பை பலப்படுத்துங்கள் என்று அக்காவை இழந்தவர் பெரும் வேதனையுடன் தெரிவித்தார்.
கரூர் சம்பவத்தில் தனது அக்காவை இழந்த சகோதரர் கூறியதாவது: என் கூட பிறந்த என் அக்கா இறந்துவிட்டார்கள். எதனால் என்று கேட்கிறேன். அடுத்து நீங்கள் வேறு ஏதாவது இடத்தில் ப்ரோகிராம் செய்வீர்கள்.
எந்த மாவட்டத்தில் செய்தாலும் அங்கேயாவது பாதுகாப்பு கொடுங்கள். அடுத்து எங்கு ப்ரோகிராம் செய்தாலும் பாதுகாப்பாக செய்யுங்கள். இதை நான் எங்க அக்கா இறந்து விட்டார்கள். ஆதங்கத்துடன் சொல்கிறேன்.
இனியாவது பாதுகாப்பாக செய்யுங்கள். அனைவரும் நல்லா இருக்கணும் என்றுதான் கூறுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.