திருவனந்தபுரம்: பள்ளி வகுப்பறையில் மாணவர் அடித்த பெப்பர் ஸ்ப்ரேவால் சக மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் அடித்த பெப்பர் ஸ்ப்ரேயால் 6 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பெண்கள் தற்காப்புக்காகப் பயன்படுத்தும் பெப்பர் ஸ்பிரேயை வீட்டிலிருந்து எடுத்து வந்து விளையாட்டாக அந்த மாணவர் அடிக்கவே, மின் விசிறி ஓடிக் கொண்டிருந்ததால், வகுப்பு முழுவதும் பரவியதாகக் கூறப்படுகிறது.