கரும்பு விலையை குறைத்திருப்பது விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பாகும் என்றும், இது திராவிட மாடல் அரசு விவசாயிகளை புறக்கணிப்பதைக் காட்டுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டுகிறார்.
கரும்பு விலை: பஞ்சாப் vs தமிழ்நாடு
பஞ்சாப்:பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், தற்போதைய அறுவடை சீசனுக்கு கரும்புக்கு ஒரு டன்னுக்கு ₹4,100 விலையை அறிவித்துள்ளார்.
இது இந்தியாவில் அதிகபட்ச குறைந்தபட்ச ஆதார விலையாக (MSP) விளங்குகிறது.பஞ்சாப் அரசு விவசாயிகளின் நலனை முன்னிலைப் படுத்துவதை இது காட்டுகிறது.
தமிழ்நாடு:அதே நேரத்தில், தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகள் டன்னுக்கு ₹3,150 மட்டுமே பெறுகின்றனர்.மத்திய அரசின் MSPக்கு சமமான விலையே அதற்கான அடிப்படையாக உள்ளது.
ஆனால், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ₹215 கூடுதல் ஊக்கத்தொகை இந்த ஆண்டு அளிக்கப்படவில்லை.
விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புடாக்டர் ராமதாஸ், பஞ்சாப் விவசாயிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டு விவசாயிகள் டன்னுக்கு ₹950 குறைவாக பெறுகிறார்கள் என்று சுட்டிக்காட்டினார்.
இதனால், ஒரு ஏக்கருக்கு சுமார் ₹38,000 இழப்பு ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.இது திராவிட மாடலின் ஒரு பகுதியா என்பதை கேள்வி எழுப்பினார்.