சென்னை: சென்னை இஸ்கான் சார்பில் குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு முகாம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து இஸ்கான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- ஜெகநாதரின் நற்பண்புகள் மற்றும் பொறுமை குறித்து சென்னை இஸ்கான் சிறப்பு கோடைகால முகாம் நடத்தவுள்ளது. இதில் 6 வயது முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கதைகள், ஸ்லோகங்கள், வரைகலை, கைவினைப் பயிற்சிகள், நெருப்பில்லா சமையல் விளையாட்டுகள் மற்றும் கீர்த்தனைகள் கற்பிக்கப்படும்.

13 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கதைகள், ஸ்லோகங்கள், கீர்த்தனைகள், ஒரு நிமிட பேச்சு, விவாதங்கள், விவாதங்கள், ஆராய்ச்சி, மன வரைபடங்கள் போன்றவை கற்பிக்கப்படும். இம்முகாமில் கலந்துகொள்வதன் மூலம், குழந்தைகள் கடவுள் பக்தி, நல்ல குணங்கள், நமது கலாச்சாரத்தை கற்று பயன் பெறுவர். மனம் ஒருமுகப்படும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
இந்த சிறப்பு முகாம் ஏப்ரல் 28-ம் தேதி தொடங்குகிறது. வார இறுதி நாட்களை தவிர்த்து 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். ஒவ்வொரு வகுப்பும் ஒன்றரை மணி நேரம் இருக்கும். இம்முகாமில் பங்கேற்க, www.iskconchennai.org/summercamp என்ற இணையதளத்தில் அல்லது 8072599295 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.