சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது.
2018 ஆம் ஆண்டு அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோருக்கு அரியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல், 2021 சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, அமைச்சர் பெரியகருப்பன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை ரத்து செய்யுமாறு இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நீதிபதிகள் கருத்துக்கருத்துகளை கேட்டறிந்த பிறகு, தமிழக அமைச்சர்கள் மீது இருந்த வழக்குகளை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.