திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பென்ஜால் புயல் காரணமாக பெய்த கனமழையால், தீபம் ஏற்றும் மலை வஉசி நகர் பகுதியில் கடந்த 1-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு வீடு மண்ணுக்குள் புதைந்து 7 பேர் உயிரிழந்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் நேற்று அப்பகுதியில் நேரடி ஆய்வு நடத்தினார்.
அப்போது, மண் சரிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். வீடுகள் கட்டித்தர வேண்டும். மேலும் மண்சரிவு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். ஆய்வின் போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்பி சுதாகர், டிஆர்ஓ ராமபிரதீபன் ஆகியோர் உடனிருந்தனர்.