சென்னை: மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பருக்கு அனுப்பப்பட்ட காவல்துறை சம்மனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எக்ஸ்-இல் அவர் பதிவிட்ட பதிவில், “‘தி வயர்’ பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பருக்கு சம்மன் அனுப்பிய அசாம் மாநில காவல்துறையின் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு தொடர்புடைய மற்றொரு வழக்கில் கைதுகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்த போதிலும் இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அதுவும் முதல் தகவல் அறிக்கையின் நகல் அல்லது வழக்கின் விவரங்களை வழங்காமல், கைது மிரட்டல் மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட தேசத்துரோகப் பிரிவிற்குப் பதிலாக, சுதந்திரமான பத்திரிகைகளைக் கட்டுப்படுத்த ஐபிசியின் பிரிவு 152 தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
கேள்விகள் கேட்பது தேசத்துரோகமாகக் கருதப்பட்டால், ஜனநாயகம் நிலைக்க முடியாது,” என்று அவர் கூறினார்.