சென்னை: தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க முகமையின் ஏற்றுமதி-இறக்குமதி நடைமுறைகள் மற்றும் சட்ட திட்டங்கள் குறித்த 4 நாள் பயிற்சி 19.03.2025 முதல் 22.03.2025 வரை நடைபெறுகிறது. இடம்: மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம். விருதுநகர் மாவட்டம். இந்தப் பயிற்சியில், ஏற்றுமதி சர்வதேச வர்த்தகத்தின் அடிப்படைகள், சந்தை தேவை, இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, கொள்முதல் வாய்ப்புகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான சட்டங்கள்.
வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவணி விகிதங்கள். உரிமம் வழங்கும் நடைமுறைகள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் போன்றவை கற்பிக்கப்படும். மேலும், இந்தப் பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்கத்தொகை மற்றும் அவற்றைப் பெறும் முறைகள், ஆலோசனைகள், அரசு உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கப்படும். மேலும், தூத்துக்குடி துறைமுகத்தை பார்வையிடுவது மற்றும் கிடங்கு பேக்கிங் மற்றும் கப்பல் நடைமுறைகள் குறித்து நேரடி பயிற்சி அளிக்கப்படும். 18 வயது நிரம்பிய மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில் தொடங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் எவரும் சேரலாம்.

இந்தப் பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோர் www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பயிற்சிக்குப் பிறகு அரசு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவுகள் தேவை.