சென்னை: தமிழக அரசு ஆதரவற்ற திருநங்கைகளுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுடைய திருநங்கைகள் மாதம் ரூ.1,500 நிதி உதவி பெறுவார்கள். செப்டம்பர் மாதத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இதை செயல்படுத்தி வருகிறது. 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகள் இதன் மூலம் நிலையான நிதி ஆதரவைப் பெறுவார்கள். இது அவர்களுக்கு சுயமரியாதையுடன் வாழ உதவும். விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை, அடையாள அட்டை, வயதுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களால் அல்லது வேறு நபர்களால் நிதி உதவி பெறாதவர்கள் மட்டுமே இதற்கான தகுதி பெற்றனர்.
திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் திருநங்கைகள், தங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகி தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, மாதந்தோறும் ரூ.1,500 வங்கிக் கணக்கில் பெறலாம். ஒவ்வொரு மாதமும் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள். கடந்த ஒரு மாதமாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. கடந்த முறையில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் புதிய பிரிவினருக்கும் இப்போது விண்ணப்பிக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது, ஸ்டாலின் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 13 லட்சம் பேர் விண்ணப்பித்து, அதில் 6 லட்சம் பேர் பெறப்படுவார்கள் என அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனுக்களின் நிலையை ஆன்லைனில் https://kmut.tn.gov.in/ என்ற முகவரி மூலம் அறியலாம். மொத்த மனுக்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு, அடுத்த 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என அரசு அறிவித்துள்ளது.