சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று காலை 6.50 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார். அவரது செயலாளர், பாதுகாப்பு அதிகாரி மற்றும் உதவியாளர் ஆகியோரும் ஆளுநருடன் சென்றனர்.
2 நாள் பயணமாக டெல்லி சென்ற கவர்னர் ரவி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.20 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை திரும்புகிறார். கவர்னர் ரவியின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது.
இந்நிலையில் 2 நாள் அவசர பயணமாக டெல்லி சென்ற கவர்னர் ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தனது பதவி நீட்டிப்பு குறித்து பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் அவர் தனிப்பட்ட பயணமாக டெல்லி சென்றுள்ளார் என்பது மற்றொரு தகவல்.