சென்னை: இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி விகிதத்தை தமிழகம் பதிவு செய்து, ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி விரைந்து வருகிறோம் என தமிழக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் இணையதளத்தில் கூறியிருப்பதாவது, இந்தியாவிலேயே தமிழகம் 9.69% வளர்ச்சியுடன் அதிக வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.

பாலின சமத்துவம், அனைத்து பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி போன்ற உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்த சாதனையை எட்டியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. உறுதியான அடித்தளங்கள், நிலையான ஆட்சி மற்றும் தெளிவான பார்வையுடன், திராவிட மாதிரியானது நமது மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது.
வலிமை மற்றும் உறுதியுடன் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற எங்களின் மகத்தான இலக்கை நோக்கி நாங்கள் விரைந்து வருகிறோம்.