தஞ்சாவூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத்தலைவர் தியாகரா ஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட நிர்வாகிகள் மஞ்சுளா, அருணா தேவி, முருகானந்தம் தவச்செல்வன், ரவிச்சந்திரன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்னர் சரபோஜி அரசு கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணை தலைவர் மாரியப்பன், இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் சோமு, மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்ச்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்ட செயலாளர் முருகன் கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுப்பாக கொண்ட அறிக்கையினை வாசித்தார்.
மாவட்ட பொருளாளர் ராஜசேகர் வரவு செலவு அறிக்கையினை சமர்ப்பித்தார். சுயசார்புக்கான அறிவியலும் தொழில்நுட்பமும் மற்றும் காலநிலையை தாங்க கூடிய ஜனநாயக பூர்வமான வளர்ச்சி என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் ஸ்டீபன்நாதன் கருத்துரையாற்றினார்.
இந்த மாவட்ட பொதுக்குழுவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாலதி, ரெஜினாமேரி, தங்கமணி, காளீஸ்வரி, மாதையன் ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.