தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரம், குறிச்சி கிராமத்தில், குறிச்சி சுய உதவிக்குழு கூட்டுறவு சங்கம் துவக்க விழா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, சங்கத்தை துவக்கி வைத்தார். பட்டுக்கோட்டை சரக கூட்டுறவு துணைப்பதிவாளர் சு.கி.சுவாமிநாதன் உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பேராவூரணி வட்டார கூட்டுறவு சார்பதிவாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் க.செல்வேந்திரன், மா.சுவாமிநாதன், பேராவூரணி திமுக வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் கோ.இளங்கோவன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் நவநீதம் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வைரக்கண்ணு கருப்பையா, திமுக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தீபலட்சுமி,
சுய உதவிக்குழு கூட்டுறவு சங்கத் தலைவர் லலிதா தியாகராஜன், துணைத் தலைவர் அங்காள அரசி மணிகண்டன் மற்றும் கிளைச் செயலாளர்கள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
விழாவில், உறுப்பினர்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்குப் புத்தகம் வழங்கப்பட்டது.