சென்னை: இடைநிலை ஆசிரியர் பயிற்சித் தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் நாளை இணையதளத்தில் இருந்து தங்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. இது குறித்து, அரசுத் தேர்வுகள் இயக்குநர் ந. லதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்வு (இரண்டாம் நிலை ஆசிரியர் பயிற்சி) முதலாமாண்டு மாணவர்களுக்கு மே 23 முதல் ஜூன் 2 வரையிலும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 3 முதல் 11 வரையிலும் நடைபெறும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் (தட்கல் மூலம் விண்ணப்பித்தவர்கள் உட்பட) அரசுத் தேர்வுகள் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) நாளை பிற்பகல் முதல் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அப்போது, அவர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.