சென்னை: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக பா.ஜ.க. சார்பில் 2023 செப்டம்பரில் தென்காசி மாவட்டத்தில் நடந்த ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் புளியங்குடி பகுதி விவசாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு பெறுவதை நிச்சயம் நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தோம். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த கடந்த 11 ஆண்டுகளில் தமிழகம் பல தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடுகளை வழங்கி பெருமை சேர்த்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருளின் புவியியல் குறியீடானது உலக அரங்கில் அதன் மதிப்பை வெகுவாக அதிகரித்து, அதன் மூலம் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்து, அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் நிச்சயமாக மேம்படும். அதன்படி புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு பெற்று ஏற்றுமதியை அதிகரித்து அப்பகுதி விவசாயிகள் பெரிதும் பயன்பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக இருந்தது.

கடந்த மாதம், தென்காசியில் நடந்த பா.ம.க., பொதுக்கூட்டத்தில், புளியங்குடி எலுமிச்சைக்கான புவிசார் குறியீடு அறிவிப்பு, ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என, நம்பிக்கை கொடுத்திருந்தோம். அதன்படி புளியங்குடி எலுமிச்சைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி கவுரவித்துள்ளது. இதன் மூலம் புளியங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்தும் பயனடைவது உறுதி.
தமிழக பா.ஜ.க., சார்பில் தமிழக விவசாய பெருமக்கள் சார்பில் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து நிறைவேற்றிய பிரதமர் மோடி மற்றும் மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களுக்கு தென்காசி மாவட்டம், தென்காசி மாவட்டம் புளியங்குடி கிராம மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.