தஞ்சாவூர்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம், ஆவணம் கிளை சார்பில், ஆவணம் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜுமுஆ பள்ளிவாசலில் 11ஆம் ஆண்டு ரத்த தான முகாம் நடைபெற்றது.
இதில் மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார்.
இம்முகாமை, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் சுதா மற்றும் மருத்துவக் குழுவினர், கொடையாளர்களிடம் 25 யூனிட் ரத்தத்தை தானமாக பெற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் யூசுப், அப்துல்லாஹ், ஜியா, கரீம் ஆகியோர் செய்திருந்தனர்.