தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், முகைதீன் ஆண்டவர் ஜமாலியா பள்ளிவாசலில் இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், இஸ்லாமியப் பெருமக்கள் திரளாகப் பங்கேற்றனர்.
அவர்களுக்கு அதிமுக சார்பில் பழங்கள், பிஸ்கெட், குளிர்பானங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு, ரமலான் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இதில், அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தமிழ்நாடு விவசாயிகள் பிரிவு இணைச் செயலாளருமான
மா.கோவிந்தராசு, அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் கோவி.இளங்கோ (பேராவூரணி தெற்கு), கே.எஸ்.அருணாசலம் (சேதுபாவாசத்திரம் தெற்கு), முருகானந்தம் (பட்டுக்கோட்டை கிழக்கு), மலை.முருகேசன் (பட்டுக்கோட்டை மேற்கு), மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஆர்.பி.ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களை ஜமாத் நிர்வாகிகள் வரவேற்றனர்.