சென்னை: தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த மாதம் 31-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதைத் தொடர்ந்து, புதிய டிஜிபியை தேர்ந்தெடுக்காமல், நிர்வாகத் துறை டிஜிபி வெங்கடராமனுக்கு கூடுதலாக சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி வழங்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், புதிய டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில், மத்திய பொது சேவை ஆணையத்தின் (யுபிஎஸ்சி) அதிகாரிகள், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உள்ளிட்டோர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட 8 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. முடிவில், சீமா அகர்வால், ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய முதல் 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
அவர்களில் ஒருவர் விரைவில் டிஜிபியாக நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.