சென்னை: தற்போது, தொழிலாளர்களின் ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதிக்கு அளிக்கப்படும் தொகையில் ஓய்வூதியத்திற்காக ஒதுக்கக்கூடிய தொகை ரூ.15,000 ஆகும். இதை மேலும் அதிகரிக்க மத்திய தொழிலாளர் நலத்துறை திட்டமிட்டுள்ளது.
குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையான ஆயிரம் ரூபாயை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவசர தேவை ஏற்பட்டால், இபிஎப் ஓய்வூதியத் தொகையில் ஒரு பகுதியை எடுக்க அனுமதி உள்ளிட்ட விதிகளை எளிமைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய மாற்றங்களை ஆய்வு செய்த பிறகே அமல்படுத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.