சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி செந்தாமரை கண்ணன் கூறியதாவது:- மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், இன்று முதல் 3-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று, தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 60 கிமீ வேகத்திலும் சூறாவளி புயல் வீச வாய்ப்புள்ளது.
இந்த நாட்களில் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். பெருஞ்சாணி அணை மற்றும் புத்தன் அணைப் பகுதிகளில் அதிகபட்சமாக தலா 8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக கூறினார்.