சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அவதூறு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டார்.
அதில் பேசிய வேலுமணி, ரயிலில் கர்ப்பிணி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கூறிய பொழுது, திமுகவைச் சேர்ந்த சூலூர் ஒன்றிய பெருந் தலைவர் ராஜேந்திரன் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கின் விசாரணை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பாக இன்று நடைபெற்றது. இரு தரப்பிலும் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. நீதிபதி, “ரயிலில் நடந்த சம்பவம் குறித்து நாளேடுகளில் வெளிவந்த தகவல்கள் தவறானவை என்று கூறிய மனுதாரர், அந்த நாளேடுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால், அந்த நாளேடுகளில் வந்த செய்தியின் அடிப்படையில் பேசிய வேலுமணிக்கு எதிராக மட்டும் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார். வேலுமணி கூட்டத்தில் பேசியதை நேரில் கேட்காத மனுதாரர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூறியதாக நிவாரணம் கோர முடியாது” என குறிப்பிட்டார்.
ஜெயலலிதா பற்றி பேச திரு.மோ.அன்பரசனுக்கு தகுதி இல்லை – ஜெயக்குமார் ஒருமையில் பேசினார்.
வாதங்களை கேட்ட நீதிபதி, “ரயிலில் நடந்த சம்பவம் தொடர்பாக நாளிதழ்களில் வெளியான தகவல் தவறு என மனுதாரர் கூறியும், அந்த நாளிதழ்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், வேலுமணி மீது மட்டும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த நாளிதழ்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் பேசிய மனுதாரர், கூட்டத்தில் வேலுமணி பேசியதை நேரில் கேட்காததால், அவரது நண்பர்கள், உறவினர்கள் கூறியதற்கு நிவாரணம் கோர முடியாது.
எனவே, வேலுமணிக்கு எதிராக ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு கோர மனுதாரர் ராஜேந்திரனுக்கு இடமில்லை. அதே நேரத்தில் இந்த சம்பவம் தொடர்பாக மட்டும் வேலுமணி எதிர்காலத்தில் மனுதாரரை பற்றி எதுவும் பேசக்கூடாது என நிரந்தர தடை விதிக்கப்படுகிறது.