சென்னை: வரும் 2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என செயல்தலைவர் ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் செயல்தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கியுள்ளோம். அதை வாக்குகளாக மாற்ற களப்பணி அவசியம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்டச் செயலாளர்கள் கவனிக்க வேண்டும்.
2026 சட்டசபை தேர்தலில் 200 இடங்களை வெல்வது இலக்கு. தயக்கமின்றி தொடர்ந்து செயல்பட்டால் அடுத்த முறை திமுகதான் ஆட்சிக்கு வரும். திமுகவைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்துள்ளன. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான புகார்கள் மீது விசாரணை நடத்தப்படும்.
அமெரிக்காவில் இருந்தாலும் கட்சியையும் ஆட்சியையும் கண்காணிப்பேன். திமுக கவுன்சிலர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.கவுன்சிலர்கள் மீது பதவிப் பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தி.மு.க., அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.