சென்னை: திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக ரூ.5.53 கோடி சொத்து சேர்த்ததாக கடந்த 2015-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படையில் ஆ.ராசா, அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் 2 நிறுவனங்கள் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க இயக்குனரகம் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில் வேலவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “இந்த வழக்கில் அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் விசாரணை இன்னும் முடியவில்லை என்றும், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, இந்த வழக்கில் விசாரணை முடிந்து, கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை, குற்றப்பத்திரிகை தாக்கல் உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது,” என, உத்தரவிட்ட நீதிபதி, இந்த மனுவுக்கு, அமலாக்க இயக்குனரகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, நவ.,28-க்கு ஒத்திவைத்தார்.