பவானி: ஈரோடு மாவட்டம் பவானி காவிரி ஆற்றில் குளிப்பதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட 93 ஆயிரம் கன அடி தண்ணீரால் ஈரோடு மாவட்டம் பவானியில் கரையோர பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், கூடுதுறையில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதிகப்படியான தண்ணீர் செல்வதால் பவானி- குமாரபாளையம் இடையிலான பழைய பாலத்தில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கந்தன் பட்டறையில் கரையோர வீடுகளை காவிரி தண்ணீர் சூழ்ந்ததால் அங்கு வசித்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பக்தர்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றுக்கரையோரம் வசிப்பவர்கள் கவனமாக இருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கால்நடை வளர்ப்பவர்கள் தங்களின் மாடுகளை ஆற்றில் குளிப்பாட்டக்கூடாது. இளைஞர்கள் ஆற்றில் குதித்து விளையாடக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.