தருமபுரி: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், மழை குறைந்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைய துவங்கியுள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 20,255 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 14,273 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 2,500 கன அடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 108.22 அடியாகவும், நீர் இருப்பு 75.90 டிஎம்சியாகவும் இருந்தது. ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நேற்று 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைந்தது.