மேட்டூர்: நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறப்பு அதிகரித்து வருகிறது.
இதனால் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 5,500 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 22,000 கன அடியாக அதிகரித்தது. அதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 5,349 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6,396 கன அடியாக அதிகரித்தது.
டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்ட நிலையில், நேற்று காலை முதல் வினாடிக்கு 13,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாயில் பாசனத்திற்காக 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் நேற்று காலை 116.02 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 115.56 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 86.56 டிஎம்சி.