சென்னை: தமிழகத்தில் மலையேற்றம் செய்ய ஏப்., 15-ம் தேதி வரை வனத்துறை தடை விதித்துள்ளது. மலை, வனப்பகுதி மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மலையேற்றம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு துவக்கியது. www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து மலையேற்றம் செய்யலாம்.
நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் ஏப்.15-ம் தேதி வரை தமிழகத்தில் மலையேற்றத்திற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. வெயில் அதிகரிக்கும் போது காட்டுத்தீ போன்ற அபாயங்கள் இருப்பதால் மலையேற்றத்திற்கு ஏப்.15 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை சூழலின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.