சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக வட தமிழகத்தில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று 6 இடங்களில் வெயில் 100 டிகிரியை எட்டியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. மேலும் திருச்சி, திருத்தணி, வேலூர், சேலம், மதுரை ஆகிய இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. தருமபுரி மற்றும் சென்னையில் 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
குறைந்தபட்சமாக வால்பாறையில் 84 டிகிரி ஃபாரன்ஹீட், குன்னூரில் 76 டிகிரி பாரன்ஹீட், ஊட்டியில் 70 டிகிரி ஃபாரன்ஹீட், கொடைக்கானலில் 69 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.