சென்னை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் 19ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என IMD எச்சரித்துள்ளது.
கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பகல் வேளையில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும். தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியில் செல்ல நேர்ந்தால் பருத்தி உடை அணிவதோடு, தண்ணீர் பாட்டிலையும் உடன் எடுத்துச் செல்லுங்கள்.