டெக்சாஸ்: சித்திரைத் திருவிழாவையொட்டி, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கு விழா வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் மிகுந்த கோலாகலமாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டும் சித்திரைத் திருவிழா மிகுந்த கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதேபோல், கள்ளழகர் ஆற்றில் இறங்கு விழா அமெரிக்காவில் நடைபெற்றது.

மீனாட்சி அம்மன் கோயில் டெக்சாஸின் பேர்லாந்தில் அமைந்துள்ளது. மதுரையில் நடைபெற்றதைப் போல, இந்தக் கோயிலிலும் முதன்முறையாக கள்ளழகர் விழாவைக் கொண்டாட கோயில் நிர்வாகிகள் திட்டமிட்டனர். அதன்படி, அமெரிக்காவில் வாழும் தமிழர்களிடமிருந்து நிதி உதவி பெற்றனர். இதையடுத்து, கள்ளழகர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
பின்னர், நூற்றுக்கணக்கான அமெரிக்க தமிழர்கள் மீனாட்சி கும்ப கோவிலில் கூடி கள்ளழகர் ஆற்றில் இறங்கியதைக் கொண்டாடினர். இந்த விழா சடங்குகள் மற்றும் பாரம்பரிய ஊர்வலங்களுடன் கொண்டாடப்பட்டது, கள்ளழகர் குதிரை இழுக்கும் தேரில் கம்பீரமாக சவாரி செய்தார்.