காடையாம்பட்டி: கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் உடல் ஏரியில் மீட்கப்பட்டது. பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டாரா என்று ோலீசார் விசாரணை மேற்கெண்டுள்ளனர்.
கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து தினமும் காவல் நிலையத்தில் கையெழுதிட்டு வந்து இளைஞர் ஒருவர் காடையாம்பட்டி அருகே உள்ள டேனிஷ்பேட்டை ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இடுப்பில் கத்தியுடன் இருந்த அருண் என்ற அந்நபரின் உடலை சுமார் 15 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
அருண் எதிர்பாராமல் தண்ணீரில் மூழ்கி இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.