மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா பகுதிகளுக்கும் இதே அளவு தண்ணீர் திறந்து விடப்படுவது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அம்மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.210 அடியாக உயர்ந்து 87.55 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பகுதிகளுக்கு 19,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடகாவின் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து மொத்தம் 17,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 3948 கன அடி தண்ணீரும், கேஆர்எஸ் அணையில் இருந்து 12,954 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.