சென்னை: ஆணுக்குப் பெண் சமமான இந்தக் காலத்திலும் பெண்கள் பாலியல் ரீதியான துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நாம் பழகிக் கொண்டிருக்கும் நபர்கள் திடீரென நமக்கு பாலியல் தொந்தரவுகளை தரத் தொடங்கினால் சில சமயங்ககளில் நமக்கு அதிர்ச்சி ஏற்படலாம். அது நமது உயர் அதிகாரியாக இருக்கலாம் உறவினராக இருக்கலாம்.
இதனால் நமது வாழ்வாதாரமோ வாழ்க்கையோ பாதிக்கப்படலாம் என்று வரும்போது அதனை எதிர்கொள்ள முடியாமல் பல பெண்கள் வேலையை விடுகின்றனர், அல்லது தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.
இவையெல்லாம் மன ரீதியாகப் பெண்களை பாதிக்கிறது. யாரோ ஒரு ஆணின் ஆசை நம் நிம்மதியை ஏன் குலைக்க வேண்டும். எனவே நாம் பழகும்போதே அந்த நபர் சரியானவரா தவறானவரா என்பதை அறிந்து கொண்டால் எதனையும் இழக்காமல் நீங்கள் நிம்மதியாக உங்கள் வாழ்க்கையைத் தொடர முடியும்
முகநூலின் உங்களோடு நட்பாக இருப்பவர்களில் யாரெல்லாம் நல்லவர் யாரெல்லாம் பின்னாளில் உங்களுக்குத் தொந்தரவு போகிறவர் என்பதை சில விஷயங்கள் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளலாம். அடிக்கடி இன்பாக்சில் வந்து உங்களை பார்க்க வேண்டும், மிஸ் யு, உங்களிடம் இந்த விஷயம் பிடிக்கும் என்பதை லைக் யூ என்று கூறுவது போன்ற வார்த்தைகள் மூலம் அவர்கள் மனநிலையை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புவார்கள்.
இந்த சமயத்தில் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். உங்களோடு மட்டும் இல்லாமல் உங்கள் நண்பர்களோடும் இவர் இதைப் போன்றுதான் பேசுகிறாரா என்பதை நீங்கள் அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல அவருக்குப் பதில் கொடுங்கள். உங்கள் புன்னகை அழகு, உங்கள் உடை அழகு, உங்களைப் போன்ற பெண்ணை நான் பார்த்ததே இல்லை என்று கூறுபவர்களிடம் கண்டிப்பாக கவனமாக இருங்கள்.