சென்னை: ஆன்லைனில் பட்டா மாறுதல் வழங்கும் தமிழ் நிலம் இணையதளம் டிசம்பர் 31-ம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நில அளவை மற்றும் நில வரி திட்ட இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வருவாய்த்துறை மற்றும் ஆன்லைன் பட்டா மாறுதல் சேவை வழங்கும், ‘தமிழ் நிலம்’ இணையதளத்தில், உழவர் பதிவேடு தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
பேரிடர் மேலாண்மை துறை. இதன் காரணமாக ஆன்லைனில் பட்டா மாறுதல் சேவை வழங்கும் ‘தமிழ் நிலம்’ இணையதளத்தின் இணையதளங்களான https://tamilnilam.tn.gov.in/Revenue/ மற்றும் https://eservices.tn.gov.in/eservicesnew/ ஆன்லைனில் பட்டா மாறுதல் வழங்கும் index.html இன்று காலை 10 மணி முதல் 31-ம் தேதி மாலை 4 மணி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.